இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது கிளிநொச்சி சேவைச் சந்தை
கிளிநொச்சி சேவைச் சந்தையை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் மீண்டும் இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது மொத்த சந்தை தொகுதியை தனியாகவும், சில்லைறை வர்த்தக நடவடிக்கைகளை சந்தை வளாகத்தின் வெளிப்பகுதியிலும் நடத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எந்தவொரு வாகனத்தையும் சந்தை உட்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை எனவும், சந்தை வெளிப்பகுதியில் நிறுத்தவும் சுகாதார தரப்பும், பிரதேச சபையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதேவேளை சந்தை தொகுதியின் இரு பிரதான வாயில்களை மாத்திரம் திறக்கவும், ஒரு வழி பாதையாக பயன்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கவும் சுகாதார தரப்பு அறிவுறுத்தியிருந்தது. இத்தனை நடைமுறைகள் உள்ளடங்கலாக கிளிநொச்சிபொது சந்தையை திறக்க சிபாரிசு செய்வதாக சுகாதார துறையினர் தெரிவித்திருந்தனர்.
இத் தீர்மானத்திற்கு பொலிசாரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பேணி இன்று சேவைச் சந்தையை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.