கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர்ச்செய்கை பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் புரெவிப் புயல் காரணமாக 1025 ஏக்கர் நெல் மற்றும் 400 ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச் செய்கை என்பன அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில்; வைத்து அவர் இந்த தகவலை வழங்கினார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 84 கிராம அலுவலர் பிரிவுகளில் 2122 குடும்பங்களைச் சேர்ந்த 6100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள போகப்பயிர் செய்கையில் 1025 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது.
அத்துடன் 400 ஏக்கர் மேட்டுநிலச் செய்கைகளையும் 150 ஏக்கர் பழப் பயிர் செய்கையும் 82 ஏக்கர் மரக்கறிச் செய்கை என்பனவும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் 483 படகுகள் சேதமடைந்துள்ளன.
1173 மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.