மோசடியால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள்!

மோசடியால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள்!

கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை, அரநாயக்க பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தள்ளது.

முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 80 மதுபான போத்தல்களுக்கு பதிலாக 25 மதுபான போத்தல்களுடன் மற்றுமொருவரை சந்தேகநபராக அடையாளப்படுத்தி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணைகளில் 60,000 ரூபா பணத்தை குறித்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் உப பொலிஸ் அதிகாரி ஒருவரும் இரண்டு சார்ஜன்களுமே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.