வலிவடக்கு தவிசாளர் பயணித்த வாகனம் மீது தாக்குதல்
வலிவடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
குறித்த தாக்குல் சம்பவம் இளவாலை வசந்தபுரம் பகுதியில் இன்று மாலை 6.40மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தாக்கியவரின் பெயர் விபரங்கள் குறித்த முறைப்பாட்டின்போது தெரிவிக்கப்படவில்லை என பொலிசாரால் குறிப்பிடப்பட்டுள்ளது
இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் உள்ள வெள்ளவாய்க்கால் அமைக்கும் பணியை பார்வையிட்டு விட்டு வீடு திரும்பும் போதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த தாக்குதல் சம்பவமானது வாகனத்தில் தவிசாளர் அமர்ந்திருந்த பக்கமே இடம்பெற்றுள்ளது.