அவிசாவளை – சீதாவக ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் 259 பேருக்கு கொரோனா...!

அவிசாவளை – சீதாவக ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் 259 பேருக்கு கொரோனா...!

அவிசாவளை – சீதாவக ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் 4 தொழிற்சாலைகளில் மேலும் 29 கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து அந்த வலயத்தில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, நாட்டில் உள்ள முஸ்லிம் யாத்ரீகர்களிடம் கோரியுள்ளது.

சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி தம்மையும் தம்முடன் நெருங்கிய தொடர்புடையர்களையும் கவனித்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் யாத்ரீகர்களது கடமையாகும் என அந்த சபையின் பதில் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.தாஷிம் தெரிவித்துள்ளார்.