யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2400 குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே யாழ் மாவட்ட அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் கோரோனா இடர் நிவாரண உதவியின் கீழ் 26 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் 2400 குடும்பங்களுக்கு இன்று வரை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும்

குறித்த நிவாரண பணிகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் எனவும், ஒரு குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபா உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

ஷஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் விவரங்கள் பிரதேச செயலாளரால் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டு மாவட்ட செயலகத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் நிதி மூலம் பெறப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு குறித்த நிவாரண உதவிகள் கட்டங்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவி்ததார்.

மேலும் 1670 குடும்பங்கள் யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.