யாழில் நீடிக்கும் சீரற்ற காலநிலை – 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிப்பு

யாழில் நீடிக்கும் சீரற்ற காலநிலை – 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் நீடிக்கும் சீரற்ற காலநிலையின் காரணமாக 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வீசிய காற்று மற்றும் மழை காரணமாக ஒன்பது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.