யாழில் கொரோனா சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் கொரோனா சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று திரும்பியவரின் வீடு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்துறை - ஓடக்கரை பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மாமியாருடைய சிகிச்சைக்காக கொழும்பு சென்று திரும்பிய நிலையில்

பருத்துறையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 2ம் கட்ட பரிசோதனையில் குறித்த நபரின் மனைவி, பிள்ளை, மாமியார் என வீட்டிலிருந்த சகலருக்கும் தொற்று உறுதியானது.

இதனையடுத்து யாழ்.கோப்பாயில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று இன்றைய தினம் வீடு திரும்பிய நிலையில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் பருத்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான தொலைபேசி , கமரா ஆகியன கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதேவேளை குறித்த 4 பேரும் அடுத்த ஒரு வாரம் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். என்பது சுகாதார பாதுகாப்பு நடைமுறை என்பதால் பொலிஸார் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்த முடியாத நிலை காணப்படுகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.