யாழில் சீரற்ற காலநிலையினால்59 குடும்பங்கள் பாதிப்பு.
யாழ் மாவட்டத்தில் தற்போதுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்என். சூரியராஜ் தெரிவித்தார்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காணப்பட்ட காற்று மற்றும் மழையின் தாக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்பது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்