யாழ் குடாநாட்டில் எகிறும் கொரோனா! சற்றுமுன் வெளியான தகவல்

யாழ் குடாநாட்டில் எகிறும் கொரோனா! சற்றுமுன் வெளியான தகவல்

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றையதினம் 416 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மருதனார்மடம் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.