
யாழ். மானிப்பாயில் மூச்சுத்திணறி 8 மாத சிசு உயிரிழப்பு
யாழ். மானிப்பாயில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்தது.
ஆண் குழந்தை ஒன்றே நேற்றுக் காலை மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் பெற்றோரால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.
எனினும் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் குழந்தை சிகிச்சை பலனின்றி
பரிதாபகரமாக உயிரிழந்தது. எனினும் மரணத்துக்கான காரணம் உடன
டியாகத் தெரியவரவில்லை.
இதன் காரணமாக உயிரிழந்த குழந்தையின் சடலம் பி.சி.ஆர். பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளது. முடிவு இன்னும் தெரியவரவில்லை