வௌ்ளவத்தை – நசீர் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
கொழும்பு – வௌ்ளவத்தையில் உள்ள நசீர் தோட்டம் பகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகள் இன்று காலை தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 5 ஆம் பிரிவு, அக்கரைப்பற்று14 ஆம் பிரிவு மற்றும் அக்கரைப்பற்று நகரப் பகுதி 3 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் பாலமுனை – 1, ஒலுவில் – 2 , அட்டாளைச்சேனை – 8 ஆகிய பகுதிகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று – 8/1 , அக்கரைப்பற்று – 8/3, அக்கரைப்பற்று – 9 ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தவிர, மொனராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
COVID தொற்றின் அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இன்று காலை 6 மணி முதல் இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.