வெளியானது வவுனியா நீதிமன்ற ஊழியர்களின் பி.சி.ஆர் முடிவுகள்!
வவுனியாவின் உயரதிகாரிகளிற்கு அவசரமான முறையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவு இன்று கிடைக்கப்பெற்றது. அதன்படி குறித்த அதிகாரிகள் எவருக்கும் தொற்று இல்லை என்று சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. குறித்த சட்டவாதி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.
இதனையடுத்து வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரிகளிற்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் இன்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன. அதன்படி உயரதிகாரிகளிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.