
அமெரிக்க வாழ் இலங்கையர்களிடம் முக்கிய கோரிக்கை
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு அமெரிக்காவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வ மத பிரார்த்தனையின் பின் - பதவி ஏற்றுக்கொண்ட அவர், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இத்தகவலை வோசிங்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இவர் இதற்கு முன் பல நாடுகளின் தூதுவராகவும் வௌிவிவகார அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.