200 கோடி ரூபாய் போதை பொருள் மீட்பு சம்பவத்தில் மோசடிகள் இல்லை..!

200 கோடி ரூபாய் போதை பொருள் மீட்பு சம்பவத்தில் மோசடிகள் இல்லை..!

மாராவில் - தொடுவாவ பகுதியில் வைத்து 200 கோடி ரூபாய் பெறுமதியான சட்டவிரோத போதை பொருள் மீட்கப்பட்ட சம்பவத்தில் எந்தவித மோசடிகளும் இடம்பெறவில்லை என மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் வசந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதை பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மீட்கப்பட்ட போதை பொருட்களில் மரத்தூள் கலக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே வசந்த திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.