யாழில் மேலும் எண்மருக்கு கொரோனா தொற்று!
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில்இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 8 போருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
சங்கானை பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய் மற்றும் வடலியடைப்பு பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ள மை குறிப்பிடத்தக்கது