
LPL தொடரில் அதிக ஓட்டங்களை மற்றும் விக்கட்டுக்களை பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகின..!
லங்கா பிரிமியர் லீக் போட்டித்தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் அதிக ஓட்டங்களை பெற்ற மற்றும் விக்கட்டுக்களை வீழ்த்திய வீரர்களின் தரப்படுத்தல் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி 9 போட்டிகளில் விளையாடியுள்ள கோல் கிளாடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணத்திலக்க 475 ஓட்டங்களை பெற்று முதலிடத்தினை பெற்றுள்ளார்.
அதேநேரம் லங்கா பிரிமியர் லீக் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்த லாவுரி இவன்ஸ் 8 போட்டிகளில் 289 ஓட்டங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதுதவிர தசுன் சானக மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்
இதேவேளை பந்துவீச்சில் ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் வனிந்து ஹசரங்க 9 போட்டிகளில் விளையாடி 16 விக்கட்டுக்களை வீழ்த்தி முதலிடத்தை பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தில் 12 விக்கட்டுக்களை வீழ்த்திய காய்ஸ் அஹமட் இரண்டாவது இடத்திலும் 11 விக்கட்டுக்களை வீழ்த்திய நிலையில் மூன்றாவது இடத்தில் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியின் லக்ஸான் சந்தகான் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.