உடுவில் பகுதியில் சுகாதார கழிவுப் பொருட்களை வீசிவிட்டுச் சென்ற சுகாதார அதிகாரிகள்!

உடுவில் பகுதியில் சுகாதார கழிவுப் பொருட்களை வீசிவிட்டுச் சென்ற சுகாதார அதிகாரிகள்!

உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நாகம்மாள் ஆலய வளாகத்தில் இன்று பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர் அதற்குப் பயன்படுத்திய சுகாதாரப் பொருட்களை ஆலய வளாகப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர் என அங்குள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச் செயல் தங்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மருதனார்மடம் மரக்கறிச் சந்தைப் பகுதிக்கு மிக அண்மையில் அமைந்துள்ள ஆலய வளாகத்திலேயே இவ்வாறு வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியிலேயே அதிகளவில் கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் அதனை உள்ளடக்கிய பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டிய சுகாதார அதிகாரிகளே இவ்வாறு நடந்துகொள்கின்றனர், இது கொரோனாவினை வேண்டுமென்றே பரப்பும் செயலாகவே அமைவாகாவும் அங்குள்ள பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினரைச் சாடியுள்ளனர்.

இதனைக் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் குறித்த செயலினைச் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது போன்ற செயல்ககள் வேறு இடங்களில் நடைபெறாமல் இருப்பதனையும் உரிய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.