யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
மருதனார்மட கொத்தனியின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு. தற்போதுவரை 43 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேருக்கு Covid – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உடுவில் பகுதியை பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், தெல்லிப்பழை மற்றும் சன்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த 2 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றையதினமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.