ஒன்றாக இணைந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை!

ஒன்றாக இணைந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை!

அலுவலகங்களில் ஒரு குழுவாக ஒன்றாக சாப்பிடுவதானது ஆபத்தானது என்றும், கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை அது ஏற்படுத்துகிறது என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்,

பெரும்பாலான மக்கள் அலுவலகம் அல்லது பணியிடத்திற்கு செல்லும் வழியில் முகக்கவசம் அணிந்தாலும், மதிய உணவு சாப்பிடும்போது அல்லது புகைப்பிடிக்கும் அதை அகற்றுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக பெரிய குழுக்களாக கூடி சாப்பிடும் போது ஒரே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ளும்போது அல்லது ஒரே கண்ணாடி குவளையில் தண்ணீர் குடிக்கும்போது இது ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இது போன்ற நிகழ்வுகளில் வைரஸ் பரவியிருப்பதை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதேபோன்று பண்டிகை காலங்களில் ஒன்று கூடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது மற்றும் ஒன்றுகூடும் போதும் பொதுமக்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு நகரங்களுக்கு வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மக்கள் பயணித்ததன் விளைவாக சில பகுதிகளில் துணைக் கொத்தணிகள் உருவாகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.