நண்பனை வீட்டில் இறக்கிவிட சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்

நண்பனை வீட்டில் இறக்கிவிட சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்

கடுவெல, போமிரிய, டட்லி குணசேகர மாவத்தை அருகே, தனது கடமைகளை முடித்துவிட்டு தனது நண்பரை தனது வீட்டில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் போது மோட்டார் சைக்கிள் டிப்பர் லாரியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், கடுவெல பொலிஸில் பணியாற்றும் அதவல, மொரகல வீதியைச் சேர்ந்த, ஒரு பிள்யைின் தந்தையான பொலிஸ் காண்டபிள் ஆவார். 

நண்பனை வீட்டில் இறக்கிவிட சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம் | Police Officer S Death In Accident

உயிரிழந்த பொலிஸ் அதிகாரி  தனது கடமைகளை முடித்துவிட்டு தனது நண்பரை தனது வீட்டில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த பொலிஸ் அதிகாரி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரழந்துள்ளார்.

விபத்தில் தொடர்புடைய டிப்பர் லொறி ஓட்டுநர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் சந்தேக நபர் பொலன்னறுவையைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.