மருதனார்மடம் பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை பூட்டு!
மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
அதனால் நாளைக் காலை தொடக்கம் மறு அறிவித்தல்வரை மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன.
வர்த்தகர்கள் உதவியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்படும் இடங்கள் தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.