நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் இன்றைய தினம் 89 பேருக்கு தொற்றுறதியானதுடன் அவர்கள் அனைவரும் புளத்சிங்கள - வேயங்கல்ல பகுதியை சேர்ந்தவர்கள் என மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாள் ஒன்றில் அதிகளவான பி.சீ.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நேற்றைய தினம் 17 ஆயிரத்து 425 பி.சீ.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.