
மருதனார் மடத்தில் தொற்று ஏற்பட்டது எவ்வாறு: இன்னும் உறுதியாகவில்லை!
மருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா.
யாழ்ப்பாணம், மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 39 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவரே தொற்றிற்குள்ளாகினார். அந்த பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளிடம் எழுமாற்றாக பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில், பி.சி.ஆர்.சோதனைக்குள்ளானார். இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.
எனினும் அவருடன் நேரடித் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ள தாகவும் எனினும் குறித்த நபருடன் நேரடித் தொடர்புபட்டவர்கள் தாமாக முன்வந்து தங்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.