தொடர்ச்சியாக மூடப்படவுள்ள பாடசாலைகள்...!

தொடர்ச்சியாக மூடப்படவுள்ள பாடசாலைகள்...!

கொரோனா பரவல் காரணமாக கண்டி மாவட்டத்தில் 3 பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, திரித்துவக் கல்லூரி, தக்சிலா வித்தியாலயம், மற்றும் கலைமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் 45 பாடசாலைகள் மூடப்பட்ட போதிலும், 42 பாடசாலைகள் இன்றைய தினம் மீள திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.