இணையத்தளத்தின் ஊடாக பண மோசடி செய்த நான்கு வெளிநாட்டவர்கள் கைது!

இணையத்தளத்தின் ஊடாக பண மோசடி செய்த நான்கு வெளிநாட்டவர்கள் கைது!

இலங்கையில் இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த நான்கு வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீட்டிழுப்பின் மூலம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து குறித்த நபர்கள் இணையத்தளத்தின் ஊடாக பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நைஜீரியா பிரஜைகள் மூவரோடு உகண்டா நாட்டு பிரஜை ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 15 கடனட்டைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.