கொரோனா காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட இத்தாலியிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம்
இத்தாலியிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதிவரை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காரியாலயத்திற்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த பிரஜை ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கானதே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் மேற்படி காரியாலயத்தை தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதோடு வரும் நாட்களில் காரியாலய உறுப்பினர்கள் அனைவரையும் பி.சீ.ஆர். பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை இத்தாலியிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தை மீண்டும் திறப்பது தொடர்பில் எதிர்வரும் 15ம் திகதி அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரியாலயம் மூடப்பட்டுள்ள குறித்த காலப்பகுதிக்குள் எவரேனும் மரணித்தால் அல்லது அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 388 724 90 16 என்ற தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.