நேற்று முதல் நடைமுறைக்கு வந்த அடுத்த ஆண்டுக்காக பாதீட்டின் யோசனைத்திட்டங்கள்
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள அடுத்த ஆண்டுக்காக பாதீட்டின் யோசனைத்திட்டங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன
இதற்கமைய , கொவிட்19 தொற்றினால் வீழ்ச்சியடைந்த சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை மீள கட்டியெழுப்பும் நோக்கில் அதன் வர்த்தகர்களுக்கு மூலதன கடன்கள் வழங்கப்படவுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் கொவிட்19 பரவல் காரணமாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இதனை கருத்திற்கொண்டு நிறைவேற்றப்பட்ட அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்துள்ளது .
இந்த நிதியானது தெரிவு செய்யப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகள் 10 இற்கு வழங்கப்பட்டு, அதனூடாக வர்த்தகர்களுக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது