கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு - டிசம்பர் 24 வரை காலக்கெடு

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு - டிசம்பர் 24 வரை காலக்கெடு

 

2021 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் மாணவர்களை, புதிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை முதல் முறையாக ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் கீழ் இன்று இடம்பெற்றது.

இதன் படி 2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விண்ணப்பித்துள்ள பாடசாலை பெயர், உட்பட விண்ணப்பம் தொடர்பான ஏனைய விபரங்கள் பாடசாலை அதிபரால் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் சகல அதிபர்களுக்கும் இந்த தரவை உள்ளிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.