வாக்களிப்பு நேரத்தில் மாற்றங்கள் நிகழுமா....!

வாக்களிப்பு நேரத்தில் மாற்றங்கள் நிகழுமா....!

தேர்தல் வாக்களிக்கும் நேரத்தினை நீடிக்கும் திட்டம் காணப்படுமாயின் ஆரம்பிக்கும் நேரம் 30 நிமிடத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதோடு நிறைவடையும் நேரத்தினை 30 நிமிடங்கள் நீடித்து நிறைவு செய்ய வேண்டும் எனவும் என கெபே அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

கடிதம் மூலம் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை வாக்களிப்பு நேரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், வாக்களிக்கும் நேரத்தினை காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை முன்னெடுப்பது குறித்து அந்த அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் இருந்து வாக்களிப்பு பெட்டிகளை வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு வரும் போது காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.