மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று..!

மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று..!

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.40 க்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக நடைபெற்று முடிந்த இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றிபெற்று ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.