புதிய ஆண்டில் காதலிப்பவர்கள் இவர்கள்தான்? அதிஷ்டசாலி ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
பிறக்கப்போகும் புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்க அளவிற்கான மாற்றங்கள் ஏற்படப் போகின்றது. சிலரிற்கு அது உயர்வான மாற்றங்களையே அள்ளித் தரப்போகின்றது. கல்வி, தொழில், திருமணம், காதல் மற்றும் குழந்தைப் பாக்கியம் என அத்தனை விடயங்களிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கான மாற்றங்கள் ஏற்படும்.
குருமாற்றம், வியாழன் மாற்றம், சனி மாற்றம் மற்றம் ராகு-கேதுவினுடைய கிரக நிலை மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் உயர்வான மாற்றங்களையே கொண்டுவருகின்றது.
காதல் மற்றும் திருமணங்கள் என தடைப்பட்ட சுபகாரியங்கள் எல்லாம் கைகூடிவந்து 2021ஆம் ஆண்டு வாழ்க்கையில் அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது. புதிய ஆண்டின் கிரக மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கப்போகிறது. இந்த தாக்கங்கள் நீங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த மாற்றங்களாக கூட இருக்கலாம்.
2021ஆம் அண்டு சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக இருக்கப்போகிறது. சிலர் காதல் துணையை அடைவார்கள், சிலரின் காதல் திருமணத்திலும், திருமண வாழ்க்கை குழந்தை செல்வத்திற்கும் என அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லப்போகிறது.
மேஷம்
உங்கள் வாழ்க்கையின் முக்கியமான மாற்றத்திற்கு தயாராகுங்கள். உங்களின் முதல் பார்வை காதல் உங்களை சுவாரஸ்யமான காதலுக்கு அழைத்துச்செல்லும். ஆண்டின் இறுதியில் ஏமாற்றத்தைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்புகளில் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம்
உங்கள் காதல் வாழ்க்கையைத் தொடங்க தயாராகுங்கள். ஆண்டு முழுவதும் சுக்கிரன் உங்கள் பக்கத்தில் இருக்கும், எனவே நீங்கள் எவ்வளவு ஆச்சரியமானவர்கள் என்பதை அனைவருக்கும் காண்பிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் வாழ்க்கையின் துணையை சந்திக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.
சிம்மம்
நீங்கள் ஏற்கனவே காதலில் இருந்தாலும் நீங்கள் சந்திக்கும் புதிய நபர் உங்களின் காதல் போக்கையே மாற்றக்கூடும். இது உங்களை கம்பர்ட் மண்டலத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தாலும் அதற்காக நீங்கள் பயப்பட வேண்டும். சவாலாக இருந்தாலும் உங்கள் காதலில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது.
கன்னி
நீங்கள் சுவாசிக்கும் காற்றில் காதல் நிறைந்திருக்கும். உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடிய ஒருவரை சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். முந்தைய ஆண்டுகளை விட நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதால், நீங்கள் புதிய சாகசங்களுக்குத் தயாராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணையை தேடுவதற்கான பணியில் உறுதியாக இருப்பீர்கள்.
துலாம்
இந்த ஆண்டு நீங்கள் புதிய அனுபவங்களுக்கு தயாராக இருப்பீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு காதல் அனுபவத்தில் ரோலர் கோஸ்டரில் செல்வது போல இருக்கும். சில சிக்கலான தருணங்களும் அதேசமயம் அற்புதமான சம்பவங்களும் மாறி மாறி ஏற்படும். உங்களை காதலில் மூழ்கடிக்கும் ஒருவரை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
தனுசு
2021ஆம் ஆண்டு உங்கள் காதல் வாழ்க்கைக்கு நல்லது, உங்கள் காதல் வாழ்கையை முழுமையாக அனுபவிக்க ஆசைப்படுவீர்கள், உங்கள் ஆசையும் நீங்கள் நினைத்தது போலவே நடக்கும். இவர்களின் அதிகரிக்கும் வசீகரம் இவர்களின் காதல் ஆசையை பூர்த்தி செய்வதாக அமையும்.
கும்பம்
இது உங்களுக்கு பொருத்தமான ஆண்டாக இருக்கப்போகிறது. 2021ஆம் ஆண்டு உங்களுக்கான உணர்ச்சிபூர்வமான வாக்குறுதியால் நிறைந்த ஒரு ஆண்டாகும். நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த சில அசாதாரண தருணங்களை நீங்கள் இந்த ஆண்டு அனுபவிப்பீர்கள். உங்களுக்காக சரியான நபரைக் கண்டுபிடிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
மீனம்
இது நீங்கள் மறக்க முடியாத ஆண்டாக இருக்கப்போகிறது. உங்கள் நேர்மறையான அணுகுமுறையும் இயற்கையான கவர்ச்சியும் உங்களை மிகவும் கவர்ச்சிகரமானவராக மாற்றும். எனவே கண்டதும் காதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உங்களை நீங்களே ரசிக்கத் தொடங்கும் ஆண்டாக இது இருக்கப்போகிறது.