நாடு முழுவதும் 8 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு விடுதலை

நாடு முழுவதும் 8 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு விடுதலை

இவ்வருடம் முடிவதற்குள் 8 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் எண்ணியுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சர் லொகான் ரத்வத்த இன்று தெரிவித்தார்.

சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறைகளில் தற்போது நிலவும் நெரிசலைக் கருத்தில் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதுமுள்ள 28 சிறைச்சாலைகளில் தற்போது 28,915 கைதிகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.