சடலமாக மீட்கப்பட்ட மாணவன் - வவுனியாவில் துயரம்

சடலமாக மீட்கப்பட்ட மாணவன் - வவுனியாவில் துயரம்

வவுனியாவில் காணாமல் போன மாணவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி பயிலும் தி. தனுசன் எனும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பேராறு நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக நண்பர்களுடன் இவர் சென்றிருந்தார்.

இந்நிலையில் நீரில் இழுத்துச்செல்லப்பட்ட இவர் நீண்ட தேடுதலின் போது கண்டு பிடிக்கப்படாத நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது சடலம் பேராறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.