சேற்றில் புதையுண்டு மாணவன் பலி! யாழ்ப்பாணத்தில் துயரம்

சேற்றில் புதையுண்டு மாணவன் பலி! யாழ்ப்பாணத்தில் துயரம்

யாழ். கரவெட்டியில் குளக் கழிவுகளை அகற்றிய மாணவன் சேற்றில் சிக்கி இன்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கடுக்காய் - கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயர்தரம் கற்கும் குறித்த மாணவன் சக நண்பர்களுடன் குளம் ஒன்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோதே சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.