தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை பெற வாய்ப்பு!
கொரோனா தொற்றாளர்கள் தாம் விரும்பும் பட்சத்தில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அரச வைத்தியசாலைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறையை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் அதிகரிக்க முடியும் எனவும் தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் கலந்துரையாடி இது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.