பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறப்பதற்கு நடவடிக்கை!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறப்பதற்கு நடவடிக்கை!

இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு அருகில், இந்த தேசிய சிறுநீரக வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய சிறுநீரக வைத்தியசாலையானது,தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையாகக் கருதப்படுகிறது.

அத்துடன், நாட்டின் சிறுநீரக நோயாளர்களின் நீண்ட கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வைத்தியசாலை அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த வைத்தியசாலையில், 204 படுக்கை வசதிகள் காணப்படுவதுடன், 100 Dialysis இயந்திரங்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பிரிவுகள், நவீன ஆய்வுகூடங்கள் மற்றும் ஏனைய நவீன தொழிநுட்பங்கள் ஆகியன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறப்பதற்கு நடவடிக்கை! 1பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறப்பதற்கு நடவடிக்கை! 2பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறப்பதற்கு நடவடிக்கை! 3பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறப்பதற்கு நடவடிக்கை! 4பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறப்பதற்கு நடவடிக்கை! 5பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறப்பதற்கு நடவடிக்கை! 6