போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகள் தொடர்பில் ஆராய தீர்மானம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் விரிவாக ஆராய்வதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் அண்மைக் காலமாக பதிவாகிய சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் லக்நாத் வெலகெதர குறிப்பிட்டார்.
இதற்காக பொலிஸாரின் உதவியை பெறவுள்ளதாக அவர் கூறினார்.