சற்று முன்னர் நந்திக் கடலில் மீட்கப்பட்ட சடலம்!

சற்று முன்னர் நந்திக் கடலில் மீட்கப்பட்ட சடலம்!

புரவி புயலின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்ப்படுத்தியிருந்தது

இந்நிலையில் மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது

இதனை அடுத்து நேற்று (03) காலை 10.00 மணிக்கு குறித்த வள்ளத்தை கரைக்கு கொண்டு வருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் நபர் ஒருவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது

கடற்படையினர் இராணுவத்தினர் மீனவர்கள் இணைந்து நந்திக்கடல் களப்பில் குறித்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்

இந்நிலையில் இன்று காலை காணமல் போயிருந்த கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளில் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

IMG 60b78d755be030db9fce1361cbb8389f V

IMG 829cbf56ad26f971e2a8d24ed3956915 V

IMG 5b0917e1662536ea742e6c050971a02a V