மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கம்

மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கம்

பாதீட்டின் குழு நிலை விவாதத்தின் போது பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கம் நேற்று திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் ஒரு சரத்திற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து அந்த சரத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

அதற்கு ஆதரவாக 137 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 5 வாக்குகள் மாத்திரமே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.