நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 627 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரை தவிர ஏனைய அனைவரும் கொவிட் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி பேலியகொட மற்றும் திவுலுபிட்டிய இரட்டைக் கொத்தணிகளில் கொவிட்19 நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது.