ஐ.நா. சபையில் அமெரிக்கா இணையவதற்காக செனட் சபையில் ஒப்புதல் அளித்தது : டிச.4- 1945

அமெரிக்கா, ஐ.நா, சபையில் இணைவதற்காக அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்தது.

 

அமெரிக்கா, ஐ.நா, சபையில் இணைவதற்காக அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்தது.

இதேதேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1829 - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சாதி முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. * 1918 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும். * 1943 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவின் எதிப்புத் தலைவர் மார்ஷல் டீட்டோ "ஜனநாயக யூகொஸ்லாவிய அரசாங்கம்" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார். * 1945 - ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் சபை வாக்களித்தது.

* 1952 - லண்டனை குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர். * 1957 - ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற ரெயில் விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர். * 1958 - பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது. * 1959 - ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.