இலங்கையில் இருந்து வெளியேறும் புரெவி சூறாவளி

இலங்கையில் இருந்து வெளியேறும் புரெவி சூறாவளி

புரெவி சூறாவளி இலங்கையில் இருந்து தற்போது வெளியேறியவண்ணம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டின் தரைப் பகுதியில் அதன் பாதிப்பு குறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது

எவ்வாறாயினும் நாளை வரையில் கொழும்பில் இருந்து புத்தளம் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பில் கடற்றொழில் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலதிக விபரங்களை வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் வழங்குகிறார்.

புரெவி சூறாவளியை அடுத்து ஆறு மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

4 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.

15 வீடுகள் முழுமையாகவும், 192 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.