புரெவி அச்சத்தினால் விமான சேவைகளுக்கு பாதிப்பில்லை..!

புரெவி அச்சத்தினால் விமான சேவைகளுக்கு பாதிப்பில்லை..!

புரெவி சூறாவளி அச்சம் காணப்படுகின்ற போதிலும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழமையான நடவடிக்கைகள் எந்தவித பாதிப்புக்களும் இன்றி முன்னெடுக்கப்படுவதாக விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளும் வழமைபோன்று இடம்பெறுவதாகவும் எந்தவித விமான சேவைகளும் இரத்துச்செய்யப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.