போதை பொருள் குற்றச்சாட்டு கைதிகளுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்..!

போதை பொருள் குற்றச்சாட்டு கைதிகளுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்..!

போதைப்பொருட்களை பயன்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவற்றுறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசலை குறைக்கும் வகையிலான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக முன்வைக்குமாறு, காவற்துறை மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் அறிவுறுத்தி இருந்தார்.

இதன்படி இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக தெபோரிவிக்கப்படுகிறது.