காற்று மற்றும் கனமழை: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

காற்று மற்றும் கனமழை: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது. இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக இன்று காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்ச்சியான மழை நீடித்து வருகின்ற நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் உள்ளனர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது.

மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.

தொடர்சியாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு! படங்கள் உள்ளே.. 1மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு! படங்கள் உள்ளே.. 2மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு! படங்கள் உள்ளே.. 3மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு! படங்கள் உள்ளே.. 4மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு! படங்கள் உள்ளே.. 5மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு! படங்கள் உள்ளே.. 6மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு! படங்கள் உள்ளே.. 7மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு! படங்கள் உள்ளே.. 8