பொலிஸ்துறை தொடர்பான இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

பொலிஸ்துறை தொடர்பான இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிஸில் 80 ஆயிரம் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றார்கள். இந்த நிலையில் அவர்களை ஒரு இலட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

பொலிஸ்துறையைப் பொறுத்தவரையில் 90 வீத அதிகாரிகள் பொலிஸாருக்குரிய கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 10 வீதமானோர் மாத்திரமே பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக சரத் வீரசேகர குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தநிலையில் தமது காலத்திற்குள் பொலிஸ்துறையை முழுமையான ஊழலற்ற திறனான துறையாக மாற்றுவதற்காக முயற்சிக்க போவதாகவும் அமைச்சர் வீரசேகர குறிப்பிட்டிருக்கிறார்.