
தர்மசிறி பெரேராவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை..!
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தையான ரஞ்சன் சில்வாவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் அபுதாபியில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான தர்மசிறி பெரேராவை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சர்வதேச காவல்துறை மற்றும் தூதரக காரியாலயத்துடன் இணைந்து அது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தலுக்கு அமைய தர்மசிறி பெரேரா அபுதாபி காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.