ஊழியர்கள் இருவருக்கு கொரோனா - கொலன்னாவை தபால் நிலையங்களுக்கு பூட்டு

ஊழியர்கள் இருவருக்கு கொரோனா - கொலன்னாவை தபால் நிலையங்களுக்கு பூட்டு

கொலன்னாவை தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவர் கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொலன்னாவை தபால் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06 உப தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குருணாகலை மாவடட்த்தில் மூடப்பட்டுள்ள உப தபால் அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.