ஜப்பான் செல்ல காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு ஓர் நற்செய்தி
14 துறைகளில் விசேட ஆற்றல்களைக் கொண்ட இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 19 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஜப்பானிய மொழி பரீட்சையில் சித்தியடைந்திருப்பது கட்டாயமாகும் என்பதுடன் அதற்கு மேலதிகமாக 14 விசேட துறைகளில் கொண்டுள்ள ஆற்றல் மற்றும் அனுபவமும் கவனத்திற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொழில் வாய்ப்புகளுக்காக 18 முதல் 48 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக தகவல்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.